திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 10 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 10 பேர் பலியாகினர்.
x
தினத்தந்தி 21 May 2021 9:11 PM IST (Updated: 21 May 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 10 பேர் பலியாகினர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 10 பேர் பலியாகினர்.
1,796 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஷ்வரூபம் எடுத்து வருகிறது. முதல் அலையை விட 2-வது அலையில் பாதிப்பு பொதுமக்களை கடுமையாக அச்சுறுத்துகிறது. இந்த கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு  முதலிடத்தில் உள்ளது.  தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூரில் ஒரே நாளில் 1,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
10 பேர் பலி
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 704 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 568-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதித்த 10 ஆயிரத்து 132 பேர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 10 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். அதன்படி கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருப்பூரை சேர்ந்த 55 வயது ஆண், 54 வயது ஆண், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 56 வயது ஆண், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50 வயது ஆண், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 58 வயது பெண், 43 வயது ஆண், 61 வயது ஆண், 50 வயது ஆண், திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண், நீலகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண் ஆகிய 10 பேர் பலியாகினர்.
தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 300-ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story