விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி இயங்கிய 4 கடைகளுக்கு ‘சீல்’


விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி இயங்கிய 4 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 21 May 2021 9:32 PM IST (Updated: 21 May 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி இயங்கிய 4 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கி வருகின்றன. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விழுப்புரம் நகரில் அரசின் முழு ஊரடங்கு உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று நேற்று காலை தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் வினோத்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

4 கடைகளுக்கு சீல்

அப்போது விழுப்புரம் கே.கே.சாலை மணிநகர் பகுதியில் முழு ஊரடங்கை மீறி முட்டை விற்பனை கடை, டீக்கடை ஆகிய 2 கடைகளும் திறந்திருந்தன. இதை பார்த்த அதிகாரிகள், அந்த 2 கடைகளையும் உடனடியாக பூட்டி சீல் வைத்தனர். மேலும் அந்த முட்டை விற்பனை கடையின் உரிமையாளருக்கு ரூ.2,200 அபராதமும், டீக்கடைக்கு ரூ.500-ம் அபராதமாக விதித்தனர்.
மேலும் விழுப்புரம் சாலாமேடு செல்லும் வழியில் அனுமதி வழங்கப்படாத நிலையில் திறக்கப்பட்டிருந்த மரச்செக்கு எண்ணெய் விற்பனை கடையையும், மாம்பழப்பட்டு சாலையில் திறந்திருந்த பெட்டிக்கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததோடு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மீண்டும் ஊரடங்கை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story