சங்கராபுரம் கடைவீதியில் 4 பேருக்கு கொரோனா பேரூராட்சி ஊழியர்கள் தடுப்பு அமைத்தனர்
சங்கராபுரம் கடைவீதியில் 4 பேருக்கு கொரோனா பேரூராட்சி ஊழியர்கள் தடுப்பு அமைத்தனர்
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்கராபுரம் நகை கடை வீதியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பேரூராட்சி ஊழியர்கள் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைத்து பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமிநாசினி தெளித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கி வந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும் நேற்று மூடப்பட்டது. மீண்டும் வருகிற 26-ந் தேதி திறக்கப்பட உள்ளதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story