367 பேருக்கு கொரோனா


367 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 May 2021 10:19 PM IST (Updated: 21 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 367 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 13 ஆயிரத்து 787 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று சிகிச்சை முடிந்து 325 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 10 ஆயிரத்து 639 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2ஆயிரத்து 994 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 154 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது ஆண் மற்றும் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story