வாணியம்பாடியில்தார் சாலையில் திடீர் விரிசல்கால்வாய் பள்ளத்தை மூட கலெக்டர் உத்தரவு
வாணியம்பாடியில் கால்வாய் அருகே ரூ.2 கோடியில் அமைக்கப்பட்டு வந்த தார் சாலையில் கனமழையால் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் கால்வாய் பள்ளத்தை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
வாணியம்பாடி
கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு
வாணியம்பாடி நகரின் மையப்பகுதி வழியாக பாலாற்றின் கிளை ஆறு ஓடு்கிறது. இதில் கழிவுநீர் அதிகம் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த ஜனவரி மாதம் கனிமவளம் சுரங்கதுறை மூலம் கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியின் மூலம் ஷாகிராபாத் முதல் ஆற்றுமேடு பகுதி வரை 660 மீட்டர் நீளத்திற்கு 1.5 மீட்டர் அகலத்தில் குடியிருப்பு சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்தபணிக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து பாலாற்றின் ஓரம் கால்வாய் கட்ட கூடாது என போராட்டம் நடத்தியதால் பாதியில் பணிகள் நிறுத்தப்பட்டது.
‘திடீர்’ கனமழை
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் வாணியம்பாடி பகுதியில் திடீரென பெய்த கனமழையால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது புதிதாக தோண்டப்பட்ட கால்வாய்களில் மழைநீர் புகுந்தது. இதனால் கால்வாயை ஒட்டியுள்ள தார்சாலையில் விரிசல் ஏற்பட்டது
இதுகுறித்து கலெக்டர் சிவன்அருளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் அங்கு வந்து விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
அதன் பின்னர் ஆற்றுமேடு முதல் கொல்லதெரு குறுக்கு சாலை வரை ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த 5 அடி கால்வாய் பள்ளம் கலெக்டர் உத்தரவின் பேரில் உடனடியாக மூடும் பணி நேற்று மாலை 5 மணியவில் நடைபெற்றது. அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டபட்டிருந்தது.
Related Tags :
Next Story