இலவசமாக சட்ட உதவி பெறுவது எப்படி?நீதிபதி தகவல்


இலவசமாக சட்ட உதவி பெறுவது எப்படி?நீதிபதி தகவல்
x
தினத்தந்தி 21 May 2021 11:43 PM IST (Updated: 21 May 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காலத்தில் இலவசமாக சட்ட உதவி பெறுவது எப்படி? என்பது குறித்து நீதிபதி தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் இலவசமாக சட்ட உதவி பெறுவது எப்படி? என்பது குறித்து நீதிபதி தகவல் தெரிவித்து உள்ளார்.

இலவச சட்ட உதவி

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சுந்தர்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் முதியோர்களுக்கான குடும்ப வன்முறைகள், முதியோர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக உடனடியாக இலவச சட்ட உதவி பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

செல்போன் எண்கள்

 உதவி தேவைப்படும் பொதுமக்கள் தங்களின் பெயர், பாலினம், வயது மற்றும் முகவரி ஆகிய விவரங்களை குறிப்பிட்டு தங்களின் குறைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைdlsasivagangai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது செல்போன் எண் 8148914147, அல்லது அலுவலக தொலைபேசி எண் 04575-242561 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறைகள் தெரிவிப்பவர்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் தொடர்பு கொண்டு இலவச சட்ட உதவியை வழங்குவார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story