கொரோனாவுக்கு மூதாட்டி சாவு
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,579 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 184 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதற்கிடையே சிவகங்கையை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா பாதித்து சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
--------

Related Tags :
Next Story