மூடப்படாத குழியால் வாகன ஓட்டிகள் அவதி


மூடப்படாத குழியால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 21 May 2021 11:52 PM IST (Updated: 21 May 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அமைதி நகரில் மூடப்படாத குழியால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 35 வது வார்டு அமைதி நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் இணைப்பு பழுதானதால் அதை சரி செய்வதற்காக சாலையின் நடுவில் குழி தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு குழியை மூடாமல் விட்டு விட்டனர். ஊழியர்களின் அலட்சியம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் குழியில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை சரிசெய்து சாலை நடுவில் உள்ள குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story