சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் வந்த கொரோனா நோயாளி
முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்காக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் கொரோனா நோயாளி வந்தார். இதை அறிந்ததும் அலுவலர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கலெக்டர் அந்த நோயாளியிடம் விசாரணை நடத்தினார்.
சிவகங்கை,
முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்காக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் கொரோனா நோயாளி வந்தார். இதை அறிந்ததும் அலுவலர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கலெக்டர் அந்த நோயாளியிடம் விசாரணை நடத்தினார்.
கொரோனா நோயாளி
பின்னர் ஆம்புலன்சில் உள்ளவர் யார்? என்ற விசாரித்தனர். அப்போது, அதில் இருப்பது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளி என டிரைவர் தெரிவித்தார். இதை கேட்டதும் அங்கிருந்தவர்களும், அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
கலெக்டர் விரைந்தார்
அப்போது, ஆம்புலன்சில் இருந்த நோயாளி திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளான அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
அவர் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். ஆனால் காப்பீட்டு திட்டத்தில் அவர் பதிவு செய்யவில்லை.
இதை தொடர்ந்து அவரது உறவினர் ஒருவர், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான அலுவலகத்தை அணுகி, அங்குள்ள அலுவலரிடம் கேட்டதற்கு பாதிப்புக்குள்ளானவரை நேரில் அழைத்து வரும்படி தெரிவித்தார்களாம். இதனை தொடர்ந்து அவரை ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு திட்ட அலுவலகத்திற்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது.
அதிகாரிகளை கண்டித்த கலெக்டர்
இதை தொடர்ந்து அந்த நோயாளி அதே ஆம்புலன்சில் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story