தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 202 பேர் மீது வழக்குப்பதிவு
கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 202 பேர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய 202 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 58 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிர கண்காணிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனாபரவல் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
202 பேர் மீது வழக்கு
நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பொது இடங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.அப்போது முகக் கவசங்கள் அணியாமல் பொது இடங்களில் சென்ற 160 பேரும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 17 பேரும் போலீசாரிடம் சிக்கினார்கள்.இதேபோல் விதிகளை மீறி வாகனங்களில் சென்ற 25 பேர் சிக்கினார்கள்.
நேற்று மாவட்டம் முழுவதும் விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக சிக்கிய 202 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.53ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறல் தொடர்பாக மாவட்டம் முழுவதும் 58 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story