கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி


கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2021 12:22 AM IST (Updated: 22 May 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது ஆண். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 16-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 19-ந் தேதி இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 51 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 19-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 20-ந் தேதி இறந்தார். அதே போல கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள 82 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் கடந்த 17-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 20-ந் தேதி இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story