விற்க முடியாமல் 5 ஆயிரம் கிலோ தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயி


விற்க முடியாமல்  5 ஆயிரம் கிலோ தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயி
x
தினத்தந்தி 22 May 2021 12:23 AM IST (Updated: 22 May 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயி

தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி குபேந்திரன் (வயது 32). இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். இதற்காக ரூ.4 லட்சம் வரை செலவு செய்துள்ளார். தற்போது தக்காளி பழங்கள் செடிகளில் நன்கு விளைந்துள்ளதால் பழங்களை அவர் அறுவடை செய்து வருகிறார். நேற்று காலை குபேந்திரன் தக்காளி தோட்டத்தில் 200 கிரேடு (5 ஆயிரம் கிலோ) தக்காளி பழங்களை அறுவடை செய்துள்ளார். பின்னர் அந்த பழங்களை விற்பனை செய்வதற்காக ராயக்கோட்டை தக்காளி சந்தைக்கு ஒரு சரக்கு வேனில் எடுத்து சென்றுள்ளார். தக்காளி சந்தையில் பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் பழங்களை விற்க முடியவில்லை. இதனால் அவர் வேதனை அடைந்தார். பின்னர் சரக்கு வேனில் தக்காளி பழங்களை நாகமங்கலம் ஏரிக்கு கொண்டு சென்று அதனை ஏரிப்பகுதியில் கொட்டியுள்ளார். தக்காளி பழங்களை அறுவடை செய்ததற்கான பணம், அதனை வாகனத்தில் கொண்டு சென்றதற்கான பணம் என எல்லாமே நஷ்டம் ஆனதால் அவர் கடும் வேதனை அடைந்தார்.

Next Story