கொரோனாவால் பெற்றோர்களை இழக்கும் குழந்தைகளை பாதுகாக்க பணிக்குழு


கொரோனாவால் பெற்றோர்களை இழக்கும்  குழந்தைகளை பாதுகாக்க பணிக்குழு
x
தினத்தந்தி 22 May 2021 12:30 AM IST (Updated: 22 May 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பெற்றோர்களை இழக்கும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை, மே.
கொரோனாவால் பெற்றோர்களை இழக்கும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் பாதுகாப்பு
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி இறப்புக்கு உள்ளாகும் நபர்களது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதன்படி அந்த குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. 
தொலைபேசி எண்
அதேபோல் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் பணிக்குழு அமைத்து குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள குழந்தைகள் அலுவலகத்தின் பாதுகாப்பு தொலைபேசி எண் - 0452-2642300ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் சைல்டு லைன் அமைப்பினரை 1098 என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story