இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா தொற்று அதிகரிப்பு

இலங்கை அகதிகள் முகாமில்  கொரோனா தொற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 May 2021 12:33 AM IST (Updated: 22 May 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 80-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருமங்கலம்,மே
திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 80-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அகதிகள் முகாம்
திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு வசிக்கும் பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதாக தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அங்கு தற்போது 80-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
புகார்
வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் தொற்று பாதிப்பு இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்காது என்று அகதிகள் முகாமில் உள்ளவர்கள் புகார் தெரிவித்தனர்.

Next Story