நாங்குநேரியில் தோட்டத்தில் பதுக்கிய 180 மதுபாட்டில்கள் பறிமுதல்
நாங்குநேரியில் தோட்டத்தில் பதுக்கிய 180 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாங்குநேரி, மே:
நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பரமசிவன் (வயது 35). இவர் நாங்குநேரி நகர அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் கொரோனா கால விடுமுறையை பயன்படுத்தி முன்னதாகவே டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்து கூடுதல் விலைக்கு விற்பதாக நாங்குநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபல்லா தெரஸ் மற்றும் போலீசார் நேற்று நாங்குநேரியில் உள்ள பரமசிவனுக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 180 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.
பின்னர் மதுபாட்டில்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார், பரமசிவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story