வள்ளியூரில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 158 பேருக்கு கொரோனா பரிசோதனை


வள்ளியூரில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 158 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 22 May 2021 1:23 AM IST (Updated: 22 May 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 158 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

வள்ளியூர், மே:
ஊரடங்கையொட்டி வள்ளியூரில் போலீசார் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில், காலை 10 மணிக்கு மேல் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தினர். நிகழ்ச்சிக்கு ராதாபுரம் தாசில்தார் கனகராஜ் தலைமை தாங்கினார். வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன் தலைமையில் டாக்டர் பீது மற்றும் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் மொத்தம் 158 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், வள்ளியூர் நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், மேற்பார்வையாளர் டேனியல், செஞ்சிலுவை சங்கம் சபேசன், அலெக்ஸ், சிவந்தகரங்கள் அமைப்பை சேர்ந்த சிதம்பரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரி சித்தா மருத்துவர் ஆயிஷாபேகம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். ஏற்பாடுகளை வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தனிப்படை ஏட்டு மகாராஜன் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

Next Story