கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 22 May 2021 1:25 AM IST (Updated: 22 May 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 202 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 5,674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் நடுத்தெருவை சேர்ந்த 86 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 3,652 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,979 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story