ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி 2 நாட்களில் போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் 2 நாட்களில் போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் 2 நாட்களில் போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திருப்பூரில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் படிப்படியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டமானது இன்னும் 2 நாட்களில் நடைமுறைப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதிய மையங்கள்
தற்போது இருப்பு உள்ள தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதால் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வரும் போது, தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே கூட்டத்தை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றும் அளவுக்கு போதுமான இடவசதி இல்லாத மையங்களுக்கு பதிலாக புதிய மையங்களுக்கு மாற்றவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story