நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி ஆதரவற்றவர்களுக்கு உணவு- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்
நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி ஆதரவற்றவர்களுக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் உணவு வழங்கினார்.
நெல்லை, மே:
நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி ஆதரவற்றோருக்கு உணவு, துணிகளை முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.
ராஜீவ்காந்தி நினைவு தினம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று காலை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு காலை உணவு மற்றும் துணிமணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு ஆதரவற்றவர்களுக்கு காலை உணவு மற்றும் துணிமணிகளை வழஙகினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
கபசுர குடிநீர்-முககவசம்
தொடர்ந்து டவுனில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மண்டல தலைவர் முகமது அனஸ் ராஜா ஏற்பாட்டில் காலை உணவை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார். தச்சநல்லூரில் மண்டல தலைவர் கெங்கராஜ் ஏற்பாட்டில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலப்பாளையம் பகுதிகளில் மண்டல தலைவர் ரசூல்மைதீன், மாவட்ட துணைத்தலைவர் வெள்ளை பாண்டியன் ஆகியோரின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டன, பாளையங்கோட்டை பகுதிகளில் மண்டல தலைவர்கள் மாரியப்பன், கோட்டூர் முருகன் ஆகியோரின் ஏற்பாட்டில் போலீசார், சுகாதாரத்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல் சங்கர்நகர் பேரூராட்சி பகுதிகளில் பேரூர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story