நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 121 பேர் மீது வழக்கு
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 121 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை, மே:
கொரோனா நோய் தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருவதால் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 121 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 141 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 1005 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 12 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story