கரூர் உழவர் சந்தை மூடல்


கரூர் உழவர் சந்தை மூடல்
x
தினத்தந்தி 22 May 2021 2:12 AM IST (Updated: 22 May 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

கரூர் உழவர் சந்தை மூடப்பட்டது

கரூர்
கரூர் பழைய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், உழவர் சந்தைக்கு வெளியே உள்ள சாலையோரத்திலும் தரைக்கடைகள் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். இதனால் காலை நேரங்களில் அப்பகுதியில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.  தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு உழவர் சந்தை வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட தரைக்கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது உழவர் சந்தைக்குள் இயங்கி வந்த காய்கறி கடைகளும் இயங்க தடை விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதற்கு மாற்று ஏற்பாடாக அங்கு இயங்கி வந்த அனைத்து கடைகளும் மினி பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 மேலும் புதிய பஸ் நிலையத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரிகள் மட்டும் கடைகள் அமைக்கவும், அங்கு சில்லறை வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த சில்லறை விற்பனை காய்கறி கடைகள் தள்ளுவண்டிகளின் மூலம் தெருக்களில் தினசரி காலை 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.


Next Story