கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 May 2021 2:16 AM IST (Updated: 22 May 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

லாலாபேட்டை
கரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார்  உத்தரவின்பேரில், பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிறைமதி தலைமையில் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் லாலாபேட்டை, கள்ளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பத்தூர், கொடிக்கால் தெரு, காவல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்னதாக, முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியப்பட்டது.


Next Story