பெருந்துறை, அந்தியூரில் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறிய 82 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
பெருந்துறை, அந்தியூரில் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறிய 82 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், மகேந்திரன், மோகன்ராஜ், இளமாறன் மற்றும் போலீசார் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் ரோடுகளில் சுற்றி வந்த 50 பேரது இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக தலா 50 பேருக்கும் ரூ.500 என மொத்தம் ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.
இதேபோல் அந்தியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களின் 32 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முக கவசம் அணியாமல் நடமாடிய 15 பேருக்கு ரூ.200 என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாத மளிகை கடை, காய்கறி கடைகள் என மொத்தம் 4 கடைகளுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியின்றி கூட்டமாக அமர்ந்து கொண்டு இருந்த 10 பேர் மீது அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Related Tags :
Next Story