கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 22 May 2021 2:28 AM IST (Updated: 22 May 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.

சிவகிரி, மே:
சிவகிரி அருகே துரைச்சாமிபுரம் இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் சபாபதி (வயது 74). இவருக்கு துரைச்சாமிபுரம் அருகே தென்மலை செல்லும் ரோட்டின் ஓரத்தில் வயல் உள்ளது. வயலுக்குச் சென்றுவிட்டு தனியாருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதனை அறிந்து அவரது மகன் பவுர்ணமி ராஜா உடனே கிணற்றில் இறங்கி தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் மாடசாமி ராசா, சண்முகையா, ராஜதுரை, முனியாண்டி, ஆகியோர் வந்து தேடினர். கிணற்றில் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் கிடந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் மின்மோட்டார் மூலம் கிணற்றில் தண்ணீரை வெளியேற்றி சபாபதியை பிணமாக மீட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story