புஞ்சைபுளியம்பட்டியில் ஊழியருக்கு கொரோனா: வங்கி மூடப்பட்டது


புஞ்சைபுளியம்பட்டியில் ஊழியருக்கு கொரோனா: வங்கி மூடப்பட்டது
x
தினத்தந்தி 22 May 2021 2:35 AM IST (Updated: 22 May 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டதால் வங்கி மூடப்பட்டது..


புஞ்சைபுளியம்பட்டி சத்தி ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு அருகில் உள்ள உக்கரம் கிளையில் இருந்து வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 2 நாட்களாக பணி நிமித்தமாக வந்து சென்றார். இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து நேற்று வங்கி மூடப்பட்டது. மேலும் வங்கியில் பணிபுரியும் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story