மின்மாற்றியில் வேன் மோதியதில் 2 பேர் படுகாயம்


மின்மாற்றியில் வேன் மோதியதில் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 May 2021 2:43 AM IST (Updated: 22 May 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

மின்மாற்றியில் வேன் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

கரூர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் நேற்று காலை தாந்தோணிமலை சிவசக்தி நகர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் உள்ள மின்மாற்றியில் திடீரென்று மோதியது. இதில், அந்த மின்மாற்றி சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டிவந்த பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 27), வேனில் வந்த காந்தி கிராமத்தை சேர்ந்த சதாம்உசேன் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அரவிந்தன் (19), மற்றொருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மின் கம்பத்தில் மோதியதில் அப்பகுதியில் சுமார் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.


Next Story