கொரோஅந்தியூர் அருகே பரபரப்புனா சிகிச்சை மையத்தில் டாக்டரிடம் நோயாளி திடீர் ரகளை நாற்காலிகள் வீச்சு-பொருட்கள் சூறை

கொரோஅந்தியூர் அருகே பரபரப்புனா சிகிச்சை மையத்தில் டாக்டரிடம் நோயாளி திடீர் ரகளை நாற்காலிகள் வீச்சு-பொருட்கள் சூறை
x
தினத்தந்தி 22 May 2021 2:45 AM IST (Updated: 22 May 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் டாக்டரிடம் நோயாளி ரகளையில் ஈடுபட்டார். அப்போது நாற்காலிகளை தூக்கி வீசி, அங்குள்ள பொருட்களையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர் அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் டாக்டரிடம் நோயாளி ரகளையில் ஈடுபட்டார். அப்போது நாற்காலிகளை தூக்கி வீசி, அங்குள்ள பொருட்களையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
டாக்டரிடம் ரகளை
அந்தியூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு அந்தியூர், அம்மாபேட்டை, குருவரெட்டியூர், ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் ஆகிய வட்டாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு தங்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி ஒருவர் அங்கிருந்த டாக்டரிடம் திடீர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரை டாக்டர் சமாதானப்படுத்த முயன்றார்.
பொருட்கள் சூறை
ஆனாலும் சமாதானம் அடையாத அந்த நபர் திடீரென நாற்காலிகளை தூக்கி வீசினார். அங்கிருந்த  மருத்துவ உபகரணங்கள், மருந்து பாட்டில்கள் மற்றும் பொருட்களை சூறையாடினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அந்த நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை சமாதானப்படுத்திய சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நோயாளி திடீர் ரகளையில் ஈடுபட்டதால் கொரோனா சிகிச்சை மையத்தில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story