கெங்கவல்லி அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட வாரச்சந்தை


கெங்கவல்லி அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட வாரச்சந்தை
x

கெங்கவல்லி அருகே ஊரடங்கை மீறி வாரச்சந்தை செயல்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே ஆணையப்பட்டி ஊராட்சியில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி வாரச்சந்தை செயல்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் அங்கு கூட்டம் அதிகமானதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்புராஜ் மற்றும் போலீசார், வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வியாபாரம் செய்யக்கூடாது என தெரிவித்து அனைவரையும் கலைந்து போகக்கூறினார்கள். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாரச்சந்தை பாதியில் மூடப்பட்டது.

Next Story