சேலம் மாவட்டத்தில் புதிதாக 725 பேருக்கு கொரோனா தொற்று- 13 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 725 பேருக்கு கொரோனா தொற்று- 13 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2021 4:28 AM IST (Updated: 22 May 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 725 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் பலியானார்கள்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 725 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் பலியானார்கள்.
725 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 667 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 307 பேர் அடங்குவர்.
ஆத்தூரில் 45 பேர், ஓமலூரில் 43 பேர், வீரபாண்டியில் 42 பேர், சேலம் ஒன்றியத்தில் 33 பேர், எடப்பாடியில் 31 பேர், நங்கவள்ளி, சங்ககிரியில் தலா 24 பேர், வாழப்பாடியில் 23 பேர், ஆத்தூரில் 20 பேர், மேட்டூரில் 19 பேர், மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 16 பேர், கெங்கவல்லியில் 14 பேர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், காடையாம்பட்டியில் 10 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 9 பேர், தலைவாசலில் 8 பேர், கொங்கணாபுரத்தில் 7 பேர், கொளத்தூரில் 6 பேர், நரசிங்கபுரத்தில் 2 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
55 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 435 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 ஆயிரத்து 234 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 130-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
13 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 13 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story