நல்லூர் பகுதியில் ஊரடங்கை மீறிய 62 வாகனங்கள் பறிமுதல்


நல்லூர் பகுதியில் ஊரடங்கை மீறிய 62 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 May 2021 8:35 PM IST (Updated: 22 May 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

நல்லூர் பகுதியில் ஊரடங்கை மீறிய 62 வாகனங்கள் பறிமுதல்

நல்லூர்
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது. அதில் காலை 6 மணி முதல் 10 மணிவரை 4 மணிநேரம் மட்டுமே அத்தியவசிய பொருட்கள் வாங்க மட்டும் கடைகள் திறக்க விதி விளக்கு அமலில் உள்ளது. அதனை பயன்படுத்தி திருப்பூர் மாநகர பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக வாகனத்தில் சென்று வருகின்றனர். இதனால் நாளுக்கு, நாள் கொரோனா தொற்று அதிக அளவில் வரவை வருகிறது.
 அதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகிறார்கள். அதன்படி நல்லூர்  பகுதிகளில் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன் தலைமையிலான போலீசார் ஊரடங்கு விதி முறைகளை மீறி தேவையில்லாமல் பல்வேறு காரணங்களை சொல்லி வாகனத்தில் சாலையில் சுற்றி திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வானங்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 62 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார். 

Next Story