இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
x
தினத்தந்தி 22 May 2021 8:52 PM IST (Updated: 22 May 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

போடிப்பட்டி
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மா சாகுபடி
உடுமலையையடுத்த ஜல்லிப்பட்டி, சின்னகுமாரபாளையம், கொங்குரார்க்குட்டை, வாளவாடி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.நடப்பு ஆண்டில் பூக்கும் பருவத்தில் பெய்த மழை, கொரோனா ஊரடங்கால் போதிய விலையின்மை, மகசூல் குறைவு உள்ளிட்ட காரணிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு சில விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளைப்பயன்படுத்தாமல் இயற்கை முறையில் மா சாகுபடி செய்துள்ளனர். மேலும் அந்த விவசாயிகள் இயற்கை முறையில் மாங்காய்களைப் பழுக்க வைத்து சந்தைப்படுத்துகின்றனர். 
ஆனால் சந்தையில் மற்ற மாம்பழங்களை விட இவை குறைந்த விலைக்கே விற்பனையாவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து இயற்கை முறையில் மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-
பொதுவாக ரசாயனங்கள் பயன்படுத்தாமல் சாகுபடி மேற்கொள்ளும்போது பறவைகள் மற்றும் விலங்குகளால் சேதம் அதிகம் இருக்கும்.ஏனென்றால் எது நல்ல பொருள் என்று மனிதர்களை விட எளிதில் உணரும் சக்தி அவற்றுக்கு உண்டு.
அதிக செலவு
தற்போதைய நிலையில் இயற்கை சாகுபடியைப் பொறுத்தவரை ரசாயன சாகுபடியை விட அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக களைக் கொல்லிகள் மூலம் களைகளைக் கட்டுப்படுத்த ரூ 500 செலவாகும் இடத்தில் கைக் களை முறையில் ஆட்களைக் கொண்டு களைகளை அகற்றுவதற்கு ரூ 10 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. மொத்தத்தில் இயற்கை சாகுபடிக்கு அதிக அளவில் மனித சக்தி தேவைப்படுகிறது. 
ஆனாலும் நஞ்சில்லாத நல்ல பொருட்களை நம் குழந்தைகளுக்குக் கொடுப்பது போல அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளோம். 
இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மாங்காய்கள் முற்றியதும் கீழே விழாமல் பக்குவமாக அறுவடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பழுக்க வைக்கும் போது அடிபட்ட இடம் அழுகி விடும். 
மேலும் முற்றிய மாங்காய்களைப் பழுக்க வைப்பதற்கு வைக்கோல் மற்றும் சாக்குகளைப் பயன்படுத்துகிறோம். 
இவ்வாறு பழுக்க வைப்பதற்கு 6 முதல் 8 நாட்கள் தேவைப்படும். அத்துடன் 100 கிலோவுக்கு 20 கிலோ வரை எடை குறையும். இதனால் தான் பல வியாபாரிகள் செயற்கை ரசாயன முறைகளைக் கையாள்கிறார்கள்.அவசர உலகத்தில் எல்லாமே அவசரம் என்பது போல ரசாயன முறையில் 6 மணி நேரத்தில் பழுக்க வைக்க முடிவதுடன் பார்ப்பதற்கு ஒரே சீரான வண்ணத்தில் அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனாலும் இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை அறியாமல் பலரும் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களையே விரும்பி வாங்குகின்றனர். இதனால் இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இது விவசாயிகளுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.எனவே இயற்கை முறையில் பழுத்த மாம்பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தனி இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். உழவர் சந்தையைப்போல இயற்கை வேளாண்மைச் சந்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.
கல் வைக்காதீர்கள்
மாம்பழங்களை விரைவாகப் பழுக்க வைக்க சில வியாபாரிகள் கார்பைடு கல் என்னும் ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.தற்போதைய கொரோனா சூழலில் பெரும்பாலா

Next Story