உடுமலை அருகே மலை அடிவாரப்பகுதியில் அமைக்கப்பட்ட 3 அடுக்கு பாதுகாப்பு அரணை சீரமைத்துதர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உடுமலை அருகே மலை அடிவாரப்பகுதியில் அமைக்கப்பட்ட 3 அடுக்கு பாதுகாப்பு அரணை சீரமைத்துதர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
x
தினத்தந்தி 22 May 2021 9:05 PM IST (Updated: 22 May 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே மலை அடிவாரப்பகுதியில் அமைக்கப்பட்ட 3 அடுக்கு பாதுகாப்பு அரணை சீரமைத்துதர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தளி, மே.23-
உடுமலை அருகே மலை அடிவாரப்பகுதியில் அமைக்கப்பட்ட 3 அடுக்கு பாதுகாப்பு அரணை சீரமைத்துதர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விவசாயக்கலை
மண்ணில் விதையைப் போட்டு விளைச்சலை எடுப்பது தனிப்பட்ட கலையாகும். படிப்பறிவு இல்லாவிட்டாலும் முழுக்க முழுக்க அனுபவ அறிவைக்கொண்டு விவசாயத்தில் சாதித்து வருகின்றனர் நம்முடைய விவசாயிகள். காலநிலையை கணித்து பருவத்தே பயிர் செய்து அதை பராமரித்து வந்து அறுவடையை எட்டி வருமானத்தை பார்க்கும் வரையிலும் விவசாயத்தில் லாபத்தை உறுதி செய்ய முடியாது. 
கரணம் தப்பினால் மரணம் என்பது போல எதிர்பாராத இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாற்றம் போன்றவை விளைச்சலை ஈட்டுவதற்கு முட்டுக்கட்டையாகி விடுகிறது. அதிலும் வனத்தை ஒட்டியுள்ள மலைஅடிவாரப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
வனவிலங்குளால் பாதிப்பு
கோடை காலங்களில் வனப்பகுதியில் இருந்து பசி, தாகத்தோடு வெளியேறும் வன விலங்குகள் நேரடியாக விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் விவசாயிகள் நிலை குலைந்து விடுகின்றனர். பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடுவதால் ஒரு சில விவசாயிகள் விவசாய தொழிலை கைவிடும் நிலைக்கு சென்று விடுகின்றனர். அதைத்தொடர்ந்து மலைஅடிவாரப் பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறையில் வனத்துறை சார்பில் அரண் ஏற்படுத்தப்பட்டது.
முதலாவதாக கற்றாழை நடவு செய்தும், இரண்டாவதாக பெரிய அளவில் அகழி அமைத்தும், மூன்றாவதாக சூரிய மின்வேலியும் ஏற்படுத்தப்பட்டது.இதனால் வனவிலங்குகள் விளைநிலங்களில் நுழைவது ஓரளவுக்கு தடுக்கப்பட்டது. 
அதற்கு அடுத்து வந்த நாட்களில் பாதுகாப்பு அரணில் முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. இதனால் கற்றாழையும் வளரவில்லை, அகழியும் மண்மூடி சமதளமாகிவிட்டது. சூரிய மின்வேலியும் பழுதடைந்து விட்டது. இதனால் காட்டுப்பன்றிகள், யானை உள்ளிட்டவை விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
பராமரிப்பற்ற பாதுகாப்புஅரண்
தற்போது கோடை வெப்பத்தின் எதிரொலியாக அடிவாரப்பகுதியில் எண்ணற்ற வனவிலங்குகள் உணவு, தண்ணீருக்காக முகாமிட்டுள்ளன. அவை எந்த நேரத்திலும் விளை நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் நிலவுகிறது.
எனவே மலைஅடிவாரப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு அரணை பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விளைபொருட்கள் வனவிலங்குகளால் சேதமாவது தடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story