மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்புகள் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்புகள் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
x
தினத்தந்தி 22 May 2021 9:10 PM IST (Updated: 22 May 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்புகள் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்புகள் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடைகள் அடைப்பு
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியான கணியூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி, தாந்தோணி, மெட்ராத்தி, துங்காவி, காரத்தொழுவு, மடத்துக்குளம், சோழமாதேவி போன்ற பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகள் உள்ளனர்.
தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, மடத்துக்குளம் மற்றம் உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள தேங்காய் எண்ணெய் அரவை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் காயவைக்கப்பட்ட தேங்காய் பருப்புகளை அரவை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் கவலை
 மேலும் மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் எண்ணெய் தயாரிக்க பயன்படும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேங்காய் பருப்புகள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளன. ஊரடங்கு மேலும் நீடிக்கும் பட்சத்தில், இன்னும் சில நாட்கள் பருப்புகளை இருப்பு வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்போது நல்ல நிலையில் காய்ந்துள்ள தேங்காய் பருப்புகள் அழுகிப் போகவும், அல்லது கெட்டுப் போகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இ- பதிவு கட்டுபாடு காரணமாக ஏற்கனவே திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற பல்வேறு தினசரி தேங்காய் மார்க்கெட்டிற்க்கு மடத்துக்குளம் பகுதியில் இருந்து தேங்காய்கள் கொண்டு செல்லப்படாமல்,  தேக்கம் அடைந்துள்ளன.  அதுமட்டுமல்ல தேங்காய் எண்ணெய் ஆட்டுவதற்கான தேங்காய் பருப்புகளும் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளதால், மடத்துக்குளம் பகுதியில் உள்ள தேங்காய் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story