உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
x
தினத்தந்தி 22 May 2021 9:17 PM IST (Updated: 22 May 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தளி
உடுமலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாகுபடி பணி
உடுமலை சுற்று வட்டாரப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாகுபடி பணிகளுக்கு அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் உதவி புரிந்து வருகிறது. அவற்றுக்கு மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. 
அதை ஆதாரமாகக் கொண்டு தென்னை, மா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட நீண்டகால பயிர்களும் கத்தரி, அவரை, பீட்ரூட், சின்னவெங்காயம், முட்டைக்கோஸ், புடலங்காய், கீரை வகைகள் உள்ளிட்ட குறுகிய கால பயிர்களும் மானாவாரியாக தானியங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்தை அடிப்படைத்தொழிலாக கொண்டு எண்ணற்ற கூலித் தொழிலாளர்கள் நாள்தோறும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தண்ணீர் திறப்பு
திருமூர்த்திஅணையை ஆதாரமாகக் கொண்ட பிஏபி 3ம் மண்டல பாசன நிலங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நீர் இருப்புக்கு ஏற்றவாறு காய்கறிகள், தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டது.அந்த வகையில் சின்ன வெங்காயம் சாகுபடியும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது. 
விதைகள் மூலமாக நாற்றை உற்பத்தி செய்தும், வெங்காயத்தை நேரடியாகவும் நடவு செய்யப்பட்டது. அவற்றை விவசாயிகள் முறையாக பராமரிப்பு செய்து வந்தனர். நீராதாரங்களில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்ததால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வில்லை. இதனால் அவை நன்றாக வளர்ந்து அறுவடையை எட்டியது.
வெங்காயம் அறுவடை
அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக சின்னவெங்காயம் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் அதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.45 வரையிலும் விற்பனையாகி வருகிறது. வெங்காயத்திற்கு தரத்திற்கு ஏற்றவாறு ஓரளவுக்கு விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story