பழனியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 67 பேருக்கு கொரோனா பரிசோதனை


பழனியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 67 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 22 May 2021 9:42 PM IST (Updated: 22 May 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் அவசியமின்றி சுற்றித்திரிந்த 67 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பழனி:
பழனி பகுதியில் கொரோனா ஊரடங்கை கண்காணிக்க போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து செயல்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் சாலையில் அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை பிடித்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, எச்சரித்து அனுப்பி வருகின்றனர். எனினும் சாலையில் அவசியமின்றி வாகனங்களில் சிலர் சுற்றி திரிந்து வந்தனர். இந்தநிலையில் ஊரடங்கை கடைபிடிக்க புதிய நடவடிக்கையாக அவசியமின்றி சுற்றித்திரிபவர்களை பிடித்து, நடமாடும் பரிசோதனை வாகனத்தின் மூலம் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆர்.டி.ஓ. ஆனந்தி உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று காலை பழனி நகரில் சாலையில் அவசியமின்றி சுற்றித்திரிந்த 67 பேரை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆர்.டி.ஓ. ஆனந்தி, தாசில்தார் வடிவேல்முருகன், வட்டார சுகாதார அலுவலர் ராஜேஸ்வரி, மேற்பார்வையாளர் வகாப் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story