மாவட்ட செய்திகள்

சங்கராபுரம் அருகே பெண் தீக்குளிப்பு + "||" + Near Sankarapuram Female arson

சங்கராபுரம் அருகே பெண் தீக்குளிப்பு

சங்கராபுரம் அருகே பெண் தீக்குளிப்பு
சங்கராபுரம் அருகே பெண் தீக்குளிப்பு
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள கிடங்கன்பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சிவசக்தி(26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு அவரது மனைவியை அடிக்கடி திட்டி, தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாட பொருட்கள் வாங்கி வரும்படி கூறிய சிவசக்தியை பிரபு திட்டி, செத்துப்போ என்று கூறியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சிவசக்தி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்தார். தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து சிவசக்தியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிவசக்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் தீக்குளித்து தற்கொலை
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. பெட்ரோல் ஊற்றி வியாபாரி, மனைவியுடன் தீக்குளிப்பு
திருச்சியில் வறுமை காரணமாக பிஸ்கட் வியாபாரி, தனது மனைவியுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு
குன்னம் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு
வேப்பந்தட்டை அருகே குடும்ப தகராறில் குழந்தையுடன் தாய் தீக்குளித்தார்.
5. மூதாட்டி தீக்குளிப்பு
திருப்பரங்குன்றம் அருகே மூதாட்டி தீக்குளித்தார்.