தியாகதுருகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு


தியாகதுருகத்தில்  கொரோனா தடுப்பு பணிகளை சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2021 10:19 PM IST (Updated: 22 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு தேவையின்றி சுற்றித்திரிந்த 10 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை 10 மணிக்கு பிறகு முழு ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும், தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினார். 

தொடர்ந்து சேலம் மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் முழு ஊரடங்கு நேரத்தில் எங்கே செல்கிறீர்கள், எதற்காக செல்கிறீர்கள் என கேட்டறிந்தார். தொடர்ந்து அத்தியாவசிய பணிக்காக சென்றவர்களை அனுப்பி வைத்தார். தேவையின்றி சுற்றித்திரிந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், வழக்கு பதிவு செய்யவும் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) புவனேஸ்வரிக்கு உத்தரவிட்டார். 
அதன்படி தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த 15 பேரிடம் தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் வசூல் செய்தனர். அப்போது கொரோனா தடுப்பு மண்டல அலுவலர் சேகர், வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story