6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று


6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று
x
தினத்தந்தி 22 May 2021 10:25 PM IST (Updated: 22 May 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று

கோவை

கோவையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோய் தொற்று

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் தாக்கமே இன்னும் குறையாத நிலை உள்ளது. இந்த நிலையில் புதிதாக கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த நோய்த் தொற்று அதிகளவில் உள்ளது. தற்போது கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.

இந்த புதிய தொற்றால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். எனவே கருப்பு பூஞ்சையை அறிவிக்கை செய்யப்பட்ட நோய்த் தொற்றாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று போலவே இதுவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கே இந்த நோய் தொற்று ஏற்படுகிறது.

சர்க்கரை நோய்

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், கொரோனா நோய்த் தொற்றின் போது அதிகளவு ஸ்டீராய்டு எடுத்து கொண்டவர்க ளுக்கும் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 சைனஸ், தலைவலி, கண் சிவத்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது கண், ரத்த நாளங்கள், மூளை ஆகியவற்றை பாதித்து இறுதியில் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

கருப்பு பூஞ்சை தொற்று பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற் படுத்தி வந்தது. இந்த நிலையில் கோவையிலும் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 அவர்கள் 6 பேரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆலோசனை பெற வேண்டும்

இது குறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:-

கோவையில் கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக கண்காணிக்க அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது 6 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க கண் டாக்டர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர், பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர் உள்ளிட்டோர் தேவைப்படுகின்றனர்.

 எனவே பொதுமக்கள் இந்த தொற்று குறித்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story