கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி புதிதாக 267 பேருக்கு தொற்று உறுதி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி புதிதாக 267 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 22 May 2021 10:48 PM IST (Updated: 22 May 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி புதிதாக 267 பேருக்கு தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 17 ஆயிரத்து 565 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 121-ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,224 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 267 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது .இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 565-ல் இருந்து 17 ஆயிரத்து 832-ஆக உயர்ந்தது.



Next Story