வேலூர் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை


வேலூர் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை
x
தினத்தந்தி 22 May 2021 10:51 PM IST (Updated: 22 May 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ், 45 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டுள்ளது.

 வேலூர் மாவட்டத்துக்கு கடந்த 15-ந் தேதி 2 ஆயிரம் கோவேக்சின், 2,500 கோவிசீல்டு என்று மொத்தம் 4,500 டோஸ் தடுப்பூசிகள் வந்தன. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மற்றும் அரசு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் 2-வது கட்டமாக தடுப்பூசி போடும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கோவேக்சின் 2-வது டோஸ் போட ஏராளமான நபர்கள் காத்திருந்தனர். அதனால் கோவேக்சின் தடுப்பூசிகள் காலியானது. 

தற்போது 1,700 கோவிசீல்டு தடுப்பூசிகளே கையிருப்பு உள்ளன. அவை ஓரிரு நாளில் முடிவடைந்து விடும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி விரைவில் போடப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் ஓரிரு நாளில் வேலூர் மாவட்டத்துக்கு வர உள்ளன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story