2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்


2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
x
தினத்தந்தி 22 May 2021 11:03 PM IST (Updated: 22 May 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே 2 குழந்தைகளோடு இளம்பெண் மாயமானார்.

காரைக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர். இவரது மனைவி கலையரசி (வயது 24).சில நாட்களுக்கு முன்பு கலையரசி, எனக்கு உடல்நிலை சரியில்லை படபடப்பாக வருகிறது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கணவரிடம் கூறினார். அதற்கு கணவர் ஊரெங்கும் ஒரே கொரோனா பரவலாக இருக்கிறது. ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இரு. சரியாகிவிடும் என கூறினார். இதனால் கலையரசி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகள் சாதனா ஸ்ரீ(6), ரஞ்சிதா (2) ஆகிய இருவரையும் அழைத்து கொண்டு காரைக்குடி அருகே வேலங்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வந்த பின்னர் தனது தாயிடம் எனக்கு ஏதாவது வேலை தேடிக்கொடு என்று கூற இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலையில் கலையரசி தனது 2 குழந்தைகளோடு வீட்டை விட்டு சென்று விட்டார். அவரது குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாயையும் 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.


Next Story