பள்ளிகொண்டா பேரூராட்சியில் 45 வீடு, 10 தெருக்கள் தகரத்தால் அடைப்பு
பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 45 வீடுகள் மற்றும் 10 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டு
தெருக்கள் அடைப்பு
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என காவல்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி சார்பில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சியில் இதுவரையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள மேட்டுத்தெரு, முருகேசன் தெரு, சாவடி தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வராதபடி தகரத்தால் அடைத்துள்ளனர்.
ரூ.2 லட்சம் அபராதம்
மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 45 வீடுகளையும் பேரூராட்சி நிர்வாகம் தகரத்தால் அடைத்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல்அலுவலர் மலர்மாறன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ஊரடங்கு காலத்தில் மாஸ் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள். ஊரடங்கு விதிகளை மீறிகடை திறந்து வைத்து வியாபாரம் செய்த உரிமையாளரிடம் இருந்து இதுவரை ரூபாய் 2 லட்சத்து 7 ஆயிரத்து 600 அபராதம் வசூலித்துள்ளனர்.
Related Tags :
Next Story