எருமப்பட்டி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்ற வாலிபர் கைது


எருமப்பட்டி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 May 2021 11:15 PM IST (Updated: 22 May 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் காய்ச்சி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்:
எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, சப்-இன்ஸ்பெக்டர் தேசிங்கன் மற்றும் போலீசார் எருமப்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாழவந்தி புதுஏரி பகுதியில் சரவணன் (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 4 லிட்டர் சாராயம் மற்றும் 1,200 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

Next Story