வாணியம்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


வாணியம்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2021 11:18 PM IST (Updated: 22 May 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி

 
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் நேற்று வாணியம்பாடி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி, திம்மாம்பேட்டை, அம்பலூர் காவல்நிலையங்களுக்கு உட்பட்ட செக்போஸ்ட்களை ஆய்வு செய்த அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசாரிடம் வெளிமாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களையும், வாகனங்களையும், சுற்றி திரியும் வாகன ஓட்டிகளையும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும். இ-பதிவு உள்ளதா என பார்க்க வேண்டும் கூறினார்.

பாதுகாப்பு உபகரணங்கள்

 வாணியம்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் போலீசாருக்கும், ஊர் காவல் படையினருக்கும் முக கவசங்களையும், பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் வழங்கினார். 

மேலும் நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கின் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும்  போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். 
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணி, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story