பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது


பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 May 2021 11:19 PM IST (Updated: 22 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
முதுகுளத்தூர் மேலக்கொடுமலூர் பகுதியை சேர்ந்தவர் குமரையா மகன் நவநீத கிருஷ்ணன் (வயது25). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பரமக்குடி பகுதியில் படிக்க சென்ற இடத்தில் பழக்கமாகி உள்ளது. இதனை தொடர்ந்து சிறுமி என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய்  ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீத கிருஷ்ணனை கைது செய்தனர்.

Next Story