கொரோனா வார்டை கண்காணிக்க 24 கேமராக்கள்


கொரோனா வார்டை கண்காணிக்க 24 கேமராக்கள்
x
தினத்தந்தி 22 May 2021 11:19 PM IST (Updated: 22 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டை கண்காணிக்க 24 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டை கண்காணிக்க 24 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
புகார்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களும், நோய் அறிகுறியுடன் உள்ளவர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இங்கு கொரோனா வார்டில் 600 படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டு அதில் தற்போது 200 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்தநிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கும், நோய் அறிகுறி உள்ளவர்களுக்கும் முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்றும் இதனால் நாள்தோறும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் புகார் எழுந்தது. 
ஆய்வு
இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து வருவதாலும், சிகிச்சை முறையாக அளிப்பதில்லை என்றும் குறைகள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. கொரோனா வார்டு என்பதால் அங்கு அதிகாரிகள் முதல் யாரும் ஆய்வுக்கு சென்றால் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
 இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இந்த தொடர் புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி நடவ டிக்கை எடுத்துள்ளது. கொரோனா வார்டில் நோயாளிகள் அனைவரையும் துல்லியமாக பார்க்கும் வகையிலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளையும், பராமரிப்பு மற்றும் கவனிப்பு முறைகளையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு
கொரோனா வார்டு பகுதி முழுவதும் ஒரு இடம் விடுபடாமல் இந்த கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (23-ந் தேதி) இந்த பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த கண்காணிப்பு கேமராக்களை ராமநாதபரம் மாவட்ட கலெக்டர் அலுவ லகம், கொரோனா வார் ரூம், மற்றும் ஆஸ்பத்திரி டீன் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டீன் ஆகியோர் அங்கிருந்தே தேவைப்படும் போது 24 மணி நேரமும் நேரடியாக கண்காணித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். 
இதன்மூலம் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு ஏற்படும் அவலங்களை போக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், டாக்டர்களின் வருகை, மருத்துவ சிகிச்சை முறைகள், செவிலியர்களின் பணி போன்றவற்றை நேரடியாக கண்காணிக்க முடியும் என்பதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அவல நிலை முடிவுக்கு வந்துள்ளது.

Next Story