கரூர் அருகே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
கரூர் அருகே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படுள்ளது. எனவே உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் அருகே உள்ள வெண்ணைமலை சாலை எப்போதும் சற்று போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருப்பதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் சாலையோரம் குப்பைகளை மலைபோல் கொட்டி செல்கின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள கடைகள் உள்ளிட்டவற்றில் தேங்கும் குப்பைகளும்அங்கு கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் குப்பைகளை கிளறி விடுகிறது. மேலும் ஒன்றுக்கொன்று நாய்கள் சண்டையிட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்கள் மீது விழுகிறது. இதனால் அவர்களும் பயந்துடனே சென்று வருகின்றனர். மேலும், குப்பையில் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது.
நோய் பரவும் அபாயம்
இதனால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story