கரூர் தொகுதி அலுவலர்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி


கரூர் தொகுதி அலுவலர்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 May 2021 11:59 PM IST (Updated: 22 May 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கரூர் தொகுதி அலுவலர்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

கரூர்
கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு உள்பட்ட 4 தொகுதிகளை 119 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த அந்த பகுதிகளில் முககவம் அணியாமல் சுற்றி திரியும் நபர்கள், இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரியும் நபர்கள், மற்றும் பொது மக்கள் ஒன்று கூடுவதை கண்டறிந்து தடுப்பதுடன், நோய் தொற்று குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவார்கள். இந்நிலையில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை 28 மண்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அதிகாரி, ஒரு போலீசார், என பிரித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோட்டாச்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. இதில் கரூர் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணியன் ஆணைகளை வழங்கினார். பின்னர் கொரோனா நோயை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறி ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

Related Tags :
Next Story