கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை விலை வீழ்ச்சி


கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 23 May 2021 12:00 AM IST (Updated: 23 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளான மாயனூர், திருக்காம்புலியூர், சித்தலவாய், பிச்சம்பட்டி, மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது. இப்பகுதியை பொறுத்தவரை வெள்ளக்கொடி ரக வெற்றிலை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்ப்பத்தி செய்யப்படும் வெற்றிலையை விவசாயிகள் பறித்து மூட்டையாக கட்டி பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டதாலும், கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெற்றிலை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நேற்று  இளம் பயிர் வெற்றிலை ஒரு மூட்டை ரூ.2,000-க்கும், முதிர்கால் வெற்றிலை ஒரு மூட்டை ரூ.800-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story