கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் சப்-கலெக்டர் ஆய்வு
கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண கூடத்தை சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அங்குள்ள வசதிகளை குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கோத்தகிரி அருகே தனியார் பள்ளிகளில் செயல்பட்டு வரும் கெரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்டார். அப்போது தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story